tamilnadu

img

நிர்வாகமும், சம்மேளனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்:

சென்னை, ஜூலை 26 - நிர்வாகமும், தொழிலாளர் சம்மேள னங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க கோரி வெள்ளியன்று (ஜூலை 26) சென்னை துறை முக வாயில் தொழிலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். 2022 ஜனவரி முதல் துறைமுக தொழிலா ளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை நிறை வடையவில்லை. 2021-2024 ஆகிய மூன்று நிதி யாண்டுகளுக்கு உற்பத்தி திறனுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்க நிர்வாக மும், சம்மேளனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி தராமல் உள்ளது. இந்நிலையில், முன் நிபந்தனையின்றி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், உற்பத்தி திறனு டன் இணைந்த ஊக்கத்தொகை வழங்க செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும், விலை வாசி உயர்வுக்கு ஏற்க அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தேசிய சொத்துக்கள் பணமயமாக்கும் திட்டத்தின் கீழ் பெருந்துறைமுகங்களில் சரக்கு கையாளும் முனையங்களை தனி யாருக்கு கொடுக்க கூடாது; காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25, 26 தேதிகளில் இந்தியா முழு வதும் பெருந்துறைமுகங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதனையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் மெட்ராஸ் போர்ட் அண்டு டாக் எம்ப்ளாயீஸ் யூனியன், சென்னைத் துறை முக ஆணைய ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம்சார்பில் தொடர் முழக்கப்போராட்டம் நடைபெற்றது. துறைமுக ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும், சென்னை துறைமுக மருத்துவமனைக்கு கூடுதல் ஊழியர்களையும், தரமான மருத்து வர்களையும் நியமிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் டி.நரேந்திர ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை சிஐடியு மாநிலச் செய லாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். யூனியன் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.