ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஏப். 7-வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு உள் கர்நாடக பகுதியி லிருந்து, குமரிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவ தாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘ஒளடதம்’ திரைப்படத்திற்கான தடை நீக்கம்
சென்னை, ஏப்.7-ஒளடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது.சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த நேதாஜி பிரபு தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ஒளடதம். இந்த படத்தை ரூ. 80 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், தமக்கு தெரியாமல் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முயற்சிப்பதால் அதற்கு தடை விதிக்குமாறு, கீழக்கரையைச் சேர்ந்த அஜ்மல்கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இதை ஏற்று நீதிமன்றமும் தடை விதித் தது. ஆனால், கீழக்கரை அஜ்மல்கான், தமக்கு ஒரு பைசா கூட தரவில்லை என்றும், போலி ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறி, நேதாஜி பிரபு மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சில ஆவணங்கள் போலியானது எனத் தெரிவதாகக் கூறி, படத்துக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.