tamilnadu

சென்னை மற்றும் திருத்தணி முக்கிய செய்திகள்

9 மாதமாக ஓய்வூதியம் நிலுவை: தையல் கலைஞர்கள் சம்மேளனம் கோரிக்கை

சென்னை, மே 8 - தையல் தொழிலாளர்களுக்கு 9 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் ப.சுந்தரம், பொதுச் செயலாளர் எம்.ஐடாஹெலன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தையல் கலைஞர்கள் வாழ்வதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். 60 வயதுக்கு மேல் உள்ள பல்லாயிரக்கணக்கான தையல் கலைஞர்களுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் கடந்த 9 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. தையல் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணம் ஓய்வூதியர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. எனவே, 9 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தையும், நிவாரண பொருட்களும் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மதுக்கடைக்கு வருபவர்களுக்கு 5 ரூபாய்க்கு வாடகை குடை

திருத்தணி, மே 8 - மதுக்கடையில் மது வாங்க வருவோர் குடையுடன் வந்தால் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி சிலர் குடையை 5 ரூபாய் வாடகைக்கு விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் உள்ளன. மது வாங்க வருகிறவர்கள் முககவசம் அணிந்து, குடைபிடித்தபடி, ஆதார் கார்டு கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது, குடையின்றி வருகிறவர்ளுக்கு கடைக்கு அருகிலேயே அமர்ந்து 5 ரூபாய்க்கு குடையை வாடகைக்கு கொடுக்கின்றனர்.

 

திருவள்ளூரில் மேலும்  62 பேருக்கு கொரோனா

திருவள்ளூர், மே 8 -  திருவள்ளுர் மாவட்டத்தில் வெள்ளியன்று (மே 8)  மேலும் 62பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை. இதனைத்  தொடர்ந்து அந்த மாவட்டத்தில்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

காவலருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மே-6 அன்று கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது இதில் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து ஆரணி காவல் நிலையம் மூடப்பட்டு கிரிமிநாசிணி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.