சென்னை: மாநில பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும், நிதி பிரச்சனையால் சிக்கியுள்ள மாநில பல்கலைக் கழகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஆக.13) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.