சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் வருகிற 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கோவை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக அக்டோபர் 12 மற்றும் வருகிற 14 ஆம் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 12 மற்றும் 14 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை மற்றும் 14 ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.