tamilnadu

img

சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை

சென்னை:
பெங்களூரு மற்றும் புதுதில்லியில் இருந்து மத்திய குழு சென்னை வந்தது. வியாழனன்று (ஜூலை 9) சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழகம் உள் ளது. இந்தநிலையில் தமிழகத்தில் செய்யப் பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக மத்திய அரசு அனுப்பி உள்ளது.

முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன்பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வு செய்தது.தற்போது 3-வது முறையாக மத்திய குழு புதனன்று  (ஜூலை 9)  தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் சென்னை வந்துள்ளனர்.அதன்படி பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன், ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர். செங்கல்பட்டு நகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் மற்றும் உயர்அதிகாரிகள் உடனிருந்தனர். நோய்தடுப்பு பணிகளை அவர்களுக்கு விளக்கினர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வியாழனன்று இக்குழுவினர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். மாநிலத்தில் நோய்தொற்றின் தற்போதைய நிலை, தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினருக்கு அமைச்சரும் செயலரும் விளக்கினர்.பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை,  மற்றும்நகரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர்.

மாலையில் கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து எழும் பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

;