tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் உதயம்

சென்னை, ஜன. 30 - அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு புதனன்று (ஜன.20) சூளைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் பொது வினியோக கடை களை பற்றிய கள ஆய்வு நடத்துவது என்று முடிவெடுக் கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வி.தனலட் சுமி தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி கொடியேற்றி னார். சாந்தி வரவேற்று பேசினார். மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர்கள் எம்.சித்ரகலா (தென் சென்னை), பாக்கிய லட்சுமி (வடசென்னை) உள்ளிட் டோர் பேசினர். உஷாராணி நன்றி கூறினார். நிர்வாகிகள் மாநாட்டில் 125 பேர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். 13 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  மாவட்டக்குழு தலைவராக ஏ.சாந்தி, செயலாளராக வி. தனலட்சுமி, பொருளாளராக ஆர்.உஷாராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

;