கடலூர், மார்ச் 6- தமிழக அரசு கொண்டுவந்துள்ள பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்ட லத்தில் விடுபட்டுள்ள கருர் மாவட்டம் குளித் தலை, திருச்சி மாவட்டம் ,லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருவரும்பூர், அரியலூர் மாவட்டம், திருமானூர், டி.பழுர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தில் சிதம்ப ரம் நகரம், திருமுட்டம் ஒன்றியங்களையும் இணைக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை முழுமையாக வேளாண் மண்டலமாக அறி விக்க வேண்டும் குறிப்பாக கடலூர் குறிஞ்சிப் பாடி ஒன்றியத்தை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள், பிரச்சாரம் செய்தவர் கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கு களையும் உடன் ரத்து செய்யவேண்டும், தமி ழக அரசு அமைக்கவுள்ள குழுவில் விவசாய பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகப்ப டுத்திட வேண்டும், மத்திய அரசு கடந்தாண்டு வேதாந்தா, ஓ.என்.சி.சி, ஜ. ஓ.சி, போன்ற நிறுவனங்களுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், சாகர்மாலா திட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடலூர், தலைமை தபால் நிலையம் அருகில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலை வர் வி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செய லாளர் ஜி.மாதவன் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளா ளர் எஸ். தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கச் செயலாளர் வி.எம்.சேகர், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்ணன், மீனவர் விடுதலை வேங்கை மாநில பொருளாளர் திருமுகம், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் பாண்டுரங்கன், கார்த்தி கேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் திருமார்பன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப், மதிமுக சார்பில் சேகர், மமக மாவட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அருள்பாபு, திராவிட முன்னேற்றக் கழக நக ரச் செயலாளர் கே. எஸ்.ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி ஆகி யோர் உரையாற்றினர்.