tamilnadu

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 23-ஆம் தேதி பேரணி

கடலூர், ஜூலை 14- காவிரி படுகையை பாதுகாக்கும் நோக்கத்து டன் செயல்படும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி கள், பொதுநல அமைப்புக ளின்  ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திர சேகரன், விசிக மாநில அமைப்புச் செயலாளர் தி.ச.திருமார்பன், தவாக மாவட்டச் செயலாளர் த.ஆனந்த், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பு வி.இளங்கீரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், காவிரி படுகையை முற்றிலும் அழித்தொழிக்கும் வகை யில் மத்திய-மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை வாயு, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை எடுப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வு காணப்படும் வரையில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்படு வது என்று முடிவெடுக்க ப்பட்டது.  ஹைட்ரோகார்பன் திட்டத்தை  மத்திய அரசு கைவிட்டு, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்க ப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் நோக்கி ஜூலை 23 ஆம் தேதி பொதுமக்கள், விவசாய சங்கங்கள் பங்கேற்கும் பேரணி நடத்து வது என்றும், அதேபோல், ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என்றும், ஒன்றியங்களிலும், நகரங்களிலும்  தெருமுனை பிரசாரம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட ச்செயலாளர் கோ.மாதவன், மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன்,  சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன்,  குடி யிருப்போர் கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், தவாக மாணவரணி தலை வர் பா.அருள்பாபு, மக்கள் அதிகாரம் து.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.