வேலூர், ஜூன் 29- வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி மலையில் அரசு படகுக் குழாமை நடத்துவதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சுற்றுலா மையமான ஏலகிரி மலையில் மாவட்ட நிர்வா கம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு கோடை விழா நடத்தப்படுகிறது. ஏலகிரியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகுக் குழாம் 3 ஆண்டு களுக்கு ஒரு முறை ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஏலம் விடப்படுகிறது. படகுக் குழாமை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. எனினும் கடந்த முறை ஏலம் எடுத்த மகளிர் சுய உதவிக் குழுவினரின் தவறான நிர்வாகத்தால் அரசுக்கு சுமார் ரூ. 1.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து படகுக் குழாம் ஏலத்தில் மகளிர் சுய உதவிக் குழு மட்டுமின்றி அனைத்துத் தரப்பின ரும் கலந்து கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அனைத்துத் தரப்பின ரும் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்ப ளித்தது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 20 பேர் முன்தொகை செலுத்திருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் ஏலம் நடத்தப்படும் இடத்தில் காத்திருந்த னர். ஏலம் தொடங்கியதும் மகளிர் சுய உதவிக் குழு சார்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் ஏலம் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், ஏலம் எடுக்க வந்த பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் ஏலத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு, ஏலம் எடுக்க செலுத்தப்பட்ட முன்பணத்தை அனைவருக்கும் திருப்பிக் கொடுத்தனர். முன்தேதி ஏதும் அறிவிக்கா மல், ஏலத்தை ரத்து செய்வதாக அதிகாரிகள் அறி வித்ததால், ஏலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.