tamilnadu

img

மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்க... ஏ.கே.ராஜன் குழுவுக்கு வாலிபர் சங்கம் கடிதம்...

சென்னை:
மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும்சமூகத்தின் பெரும்பகுதி மாணவர்கள் மருத்துவக்கல்வி பெறுவதை வெளிப்படையாகவே தடுக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராயதமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர்  என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்தியர்கள் கட்டாயம் நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுஎழுத வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நடவடிக்கையைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடக்கம் முதலேஎதிர்த்து வருகிறது.  நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத காரணத்தால் இதுநாள் வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா உட்பட 13 இளம் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.கீழ்க்காரணங்களால் நீட் தேர்வை வாலிபர் சங்கம் எதிர்க்கிறது.மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்தத் தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மருத்துவக் கல்வியும் பொது சுகாதாரமும் பின்னிப்பிணைந்தது. அந்த வகையில் பொது சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் நீட் தேர்வு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும்,கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் மூன்றாவது பட்டியலில் 25-வது இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால், கல்வித்துறையில் மாநிலச் சட்டப்பேரவைக்கும், மாநில நிர்வாகங்களுக்கும் சட்டபூர்வமான தகுதி உள்ளது. இத்தகைய நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் ஒருதலைப்பட்சமாக ஒப்படைப்பதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம், குறிப்பாக கூட்டாட்சி அமைப்பும் மீறப்படுகிறது.

நீட்  தேர்வு என்பது, வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட வெவ்வேறு வாரியங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்பதால் சமநிலையான போட்டித் தளமாக இல்லை.உளவியல் ரீதியாக மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பயிற்சிக்காக கணிசமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளதால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்படுகிறது  கூடுதலான பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான பயிற்சியை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த நான்காண்டு கால அனுபவம் இதையேஉணர்த்துகிறது.  ஒன்றிய அரசின் நீட் தேர்வு சமூகத்தின் பெரும்பகுதிமாணவர்கள் மருத்துவக்கல்வி பெறுவதை வெளிப்படையாகவே தடுக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;