tamilnadu

img

ஆசிரியர் சங்க தலைவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்க...

சென்னை:
பொய் குற்றச்சாட்டு அடிப்படையில் சங்கத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17பி குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்ந்த சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது. சங்க நிர்வாகிகள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் தெரிவித்த கருத்திற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் 17(பி) குற்றக் குறிப்பாணை வழங்கி இருப்பது கண்டனத்திற் குரியது. இந்த நடவடிக்கையானது சங்கங்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் உள்ள இடர்பாடுகள், குளறுபடிகள் மற்றும் மாற்றுதிறனாளிகள், தனித்தேர்வர்கள் நிலைமைகள், இதில் தனியார் பள்ளிகள் முறைகேடு செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.இதற்காக அவ்விரு சங்கத் தலைவர்களுக்கும், அரசாணையை விமர்சனம் செய்தார் என குற்றம்சாட்டி  பள்ளிக் கல்வி இயக்குநர் 17 (பி) குற்றக் குறிப்பாணையை வழங்கியுள்ளார். உண்மைக்கு புறம்பான அந்த குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;