சென்னை, மார்ச் 30- கொரோனோ நோய்த்தடுப்பு நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை தமிழக அர சுக்கு வழங்கி நோய் தடுப்பு மற்றும் நிவா ரண பணிகளில் பங்கேற்கவும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அர சாணை ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால் பொருளாதார ரீதியாக கடை நிலை ஊழி யர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், தினக்கூலி, நடைபாதை வியாபாரிகள் போன்ற வர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளா வர்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல் நிவா ரணம் வழங்க அரசு முன் வர வேண்டும்.ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய், விலையில்லா ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். மேலும் பல்வேறு உதவி களை செய்ய வேண்டும்.
அரசு நிர்ணயிக்கும் எவ்வகை உதவியும் செய்ய எங்கள் சங்கம் தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். அரசுகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன பணி யாளர்கள் வீடுகளில் இருந்து கொண்டே பணியாற்றி வருகிறோம். எங்கள் பணி தேவைப்படின் எந்த நேரத்திலும் வருவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.