tamilnadu

img

இப்படியும் கரைகளை கட்ட முடியுமா?

காஞ்சிபுரம், ஜூன் 26 - புனரமைக்கப்பட்ட சில  மாதங்களிலேயே சேத மாகி பல்லிளிக்கும் குளத்தின்  கரைகள், ஆட்சியின் அவ லத்தை பறைசாற்றுகிறது. காஞ்சிபுரம் நகரத்தை ஒட்டியுள்ள குருவிமலை பகுதியில் எட்டியம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கரை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து முறை யிட்டதால், கடந்த பிப்ரவரி  மாதம் 21 லட்சம் மதிப்  பீட்டில் கரைகள் அமைக் கப்பட்டு பணிகள் நிறைவ டைந்தன.  கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக காஞ்சிபுரம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதாரண மழை பெய்தது.  அந்த மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியா மல் குளத்தின் கரைகள்  ஆங்காங்கே விரிசல் விட்டுள் ளது.  கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற வேலைகளை இவ்  வளவு மோசமாகவும் செய்ய  முடியுமா என்று அங்கால யத்து கேள்வி எழுப்புகின்ற னர்? மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?