tamilnadu

img

முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் 

இந்த கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2021-2022 ஆம் ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர்களின் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். 2 ஆண்டு எம்எஸ்சி படிப்பு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி, எம்ஃபில் ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கச் செப்டம்பர் 15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.இ., பி.டெக்., பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேரவும், எம்.சி.ஏ படிப்பில் சேரவும் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்குக் கடைசி தேதியாகச் செப்டம்பர் 15 ஆம் தேதியையும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

;