பிஎஸ்என்எல் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரியும் ஆட்குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், கேசுவல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் காசி, சென்னை தொலைபேசி தலைவர் ஆர்.அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலசெயலாளர் எம்.கன்னியப்பன், திருவொற்றியூர் பொதுத்தொழிலாளர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயராமன், பி.சுப்பிரமணியன் (ஏஐபிடிபிஏ மாநிலத்தலைவர்), சகோதர சங்க நிர்வாகிகள் எஸ்.மணி , எம்.மாறன், ஏ.திலகவதி உள்ளிட்ட பலர் பேசினர். நிறைவாக கே.சேகர் நன்றி கூறினார்.