tamilnadu

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

சென்னை, மே 6-பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக பி.எஸ்.என்.எல்.  இயக்குனர் ஷீத்லா பிரசாத் தெரிவித்திருக்கிறார்.இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். 2018-19 ஆம் நிதியாண்டில் 54,000 புதிய செல்போன் கோபுரங்களை நிறுவி உள்ளது. இது கடந்த மூன்று நிதியாண்டுகளில் மொத்தமாக நிறுவப்பட்ட கோபுரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி செல்போன் கோபுரங்களையும் நிறுவத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் வரை சுமார் 5,34 04ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட் டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளன. இதனால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறி, பி.எஸ்.என்.எல்.-ல் இணைந்து வருகின்றனர்.2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எம்.என்.பி.முறையில் தனியார் நிறுவனங்களில் இருந்து விலகி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இணைந்து உள்ளனர்.இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி வாடிக்கையாளர் எண்ணிக் கையை கூட்டிய இரண்டே நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல். விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 லட்சம் அதிகரித்துள்ளது.ரூ.78, ரூ.98 மற்றும் ரூ.298 சிறப்பு கட்டண வவுச்சர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு “ஈராஸ் நவ்” என்னும் உயர்மதிப்பு சேவையை பி.எஸ்.என்.எல். சமீபத்தில் இலவசமாக அளித்துள்ளதன் மூலம் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளோடு அளவற்ற திரைப்படங்கள் மற்றும் பிரத்யோக வீடியோ தொடர்களை கண்டு களிக்கும் வசதியை அளித்துள்ளது.குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யும் வகையில் பி.எஸ்.என்.எல். செயல்பட்டு வருகிறது என்று ம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

;