tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களின் 10 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மே 21 - பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய 10 மாத ஊதிய  நிலுவையை விரைந்து வழங்க வலியுறுத்தி வியாழனன்று (மே 21) புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி  நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும், ஏப்ரல் மாத ஊதியத்தையும், ஒப்பந்த ஊழி யர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலு வைத் தொகையையும் உடனடியாக வழங்க  வேண்டும், ஊழியர்களுக்கு வெளிப்புற மருத்துவ செலவிற்கான உச்ச வரம்பை 23 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கக்  கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது.

பிஎஸ்என்எல் தலைமை பொது மேலா ளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர்  சங்கத் தலைவர் குமார் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல்இயு அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யூ கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டச் செயலா ளர் சுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க பொரு ளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள்  முருகையன், குமார் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர்

வேலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் பென்சனர்ஸ் அசோசியேசன் மாநில செயலாளர் சி.ஞான சேகரன், மாவட்டதலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஜோதி சுதந்திர நாதன்,  பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் மாவட்ட  செயலாளர் தங்கவேலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகி யோர் உள்ளிட்டோர் பேசினர்.

;