எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய ‘மானசா’ நூல் வெளியீட்டு விழா 46வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்நூலை கவிஞர் தி.பரமேஸ்வரி வெளியிட மதுமிதா பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, பாரதி புத்தகாலயம் த.நாகராஜன், நூலாசிரியர் லஷ்மி பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.