ஆந்திர மாநிலம் திருப்பதியில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் தமிழகத்திலிருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் தருணும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100.மீ ஓட்டத்தில் கிஷோரும், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 14 வயதுகுட்பட்டோர் மாணவியர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் அஞ்சனா கிருஷ்ணா ஆகியோர் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர் உமா, விக்னேஷ், எப்சி மேரி ஆகியோர் உள்ளனர்.