மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்ற தமிழக ஆளுநர் கருப்புக் கொடி காட்டி இன்று போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுர ஆதீன நிகழ்ச்சிக்கு பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.
முன்னதாக மயிலாடுதுறை அடுத்த மன்னன் பந்தலில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு நிர்வாகத்தை முடக்குகிற, நீர் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிற தமிழக ஆளுநரை கண்டிக்கும் விதமாக, சில அரசியல் மற்றும் அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்புக் கொடியை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.