சென்னை, ஜூன் 1-``ஹிட்லரை வீழ்த்தியதை போல் மதவெறி, பாசிச பாஜகவும் விரைவில் வீழ்த் தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் அக்கட்சியின் சிறுபான்மைச் செயலாளர் முராத் புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-இந்தியாவில் மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக் கும் ஒரு ஆட்சி அமைந்துள் ளது. 2014ஆம் ஆண்டு மோடி வளர்ச்சி வளர்ச்சி என்று வாக்கு சேகரித்தார். ஆனால் 2019 தேர்தலில் வளர்ச்சி, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக் கையால், ஜி.எஸ்.டி.யால் சிறு குறுந்தொழில்கள் பாதிப்பு குறித்துப் பேசவில்லை. மாறாக உல்பாமா, பலகோட் சம்பவத்தை வைத்து மதவெறி, தேசிய வெறியை ஊட்டக் கூடிய வகையில் பிரச்சாரம் மேற் கொண்டார்கள்.காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேயைத் தேசபக்தர் எனப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவின் அடிநாதமாக இருக்கக் கூடிய மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும், யாரும் அச்சப்பட வேண்டாம். ``ஹிட்லர் பாசிச கருத்தியலை மக்களிடம் திணித்து ஆட்சிக்கு வந்தான். ஆனால் சில ஆண்டுகளிலேயே ``ஹிட்லரின் பாசிச ஆட்சி வீழ்த்தப்பட்டது. காந்தி, காயிதேமில்லத், பெரியார் பிறந்த மண்ணில் பாசிசம் வெற்றிபெற முடியாது. ``ஹிட்லரை வீழ்த்தியதை போல் மதவெறி பாசிச பாஜகவும் விரைவில் வீழ்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் வைகோ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.எம்.அசன் ஆரூண், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன், விசிக பொருளாளர் முகம்மது யூசுப், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜாவஹிருல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.