tamilnadu

img

இருமொழிக்கொள்கை: முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு

சென்னை:
மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மும்மொழி  திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. மொழிக் கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே கல்வி உரிமையை பறிப்பது என கடிதம் எழுதினோம். எதிர்க்கட்சிகளின் கடிதத்தின் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அரசின் சார்பில்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று திங்களன்று (ஆக. 3) திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இறுதிவரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இருக்கவேண்டும்.

இதோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக் கொள்கை, பல நுழைவுத் தேர்வுகள் - இவைபற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டினையும் அறிவித்தலும் அவசியம்! இந்த முடிவை உடனடியாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றி என கூறியுள்ளார்.

;