tamilnadu

img

மகாத்மா மண்ணில் மதவெறி - நூல் வெளியீட்டு விழா  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி‌.ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள 'மகாத்மா மண்ணில் மதவெறி ' நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட, தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார்.  

இந்த விழாவில் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு, ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.