tamilnadu

img

வங்கிக் கடன்: கைத்தறி நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 3-   அனைத்து நெசவாளர்களுக்கும் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு  செவ்வாயன்று (ஜூலை 2) ஆரணி யில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.பூபாலன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் துவக்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் கே.சந்திரையா வேலை அறிக்கையை வாசித்தார்.  துணைத் தலைவர் ஏ.ஜி.செல்வராஜ், துணைச் செயலாளர் தனஞ்செழியன், விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.தவமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன்  நிறைவுரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்

மாவட்டத் தலைவராக ஜி.சூர்யபிரகாஷ், செயலாளராக கே.சந்திரையா, பொருளாளராக வி.முனியம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், பட்டு ஜரிகை நூல் மீது உயர்த்திய விலையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மழைக்கால நிவாரணம், ஆயூள் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து நெசவாளர்க ளுக்கும் அமல் படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக நடைமுறை படுத்த வேண்டும், பணப்பயன்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
 

;