சென்னை,மார்ச் 24- சமூகத்தில் கோவிட்-19 பாதிப்பு பெருகி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆக்சிஸ் வங்கி ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், விற்பனையாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ப்ரீபெய்டு கார்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகையைத் தள்ளுபடி செய்யப்படும். இதனால், ஆன்லைன் மூலமாகச் செலுத்தப்படும் உடனடி கட்டணச் சேவை (ஐஆஞளு), ஏடிஎம்மில் பணம் சார்ந்த மற்றும் சாராத பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கான கட்டணம் ஆகியவை மார்ச் 23 முதல் 31ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.