tamilnadu

img

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்ல!

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு அவசியம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
நாட்டில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து  பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடும் என்ற அச்சம் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோயியல்துறை தலைவர் சமீரன் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெரியவர்களிலும் குறிப்பாக, நோய் தெற்று பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் இருப்பவர்கள் போன்றவர்களுக்கான தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தவரையில், மிகக்குறைந்த அளவில்தான் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் காட்டுகின்றன.
குழந்தைகள்  பெரியவர்களைப் போல கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை, சந்திக்கவோ, இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும் இவ்வாறு கூறினார்.


 

;