tamilnadu

விஐடிக்கு சிறந்த உயர் கல்விக்கான விருது

சென்னை,ஜூன் 27- ‘கல்வி உலகம் இதழ்’ தேசிய அளவில்  சிறந்த உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களை  தேர்வு செய்ய கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் பேராசிரி யர்கள், தொழில் நிறுவனங்களின் வல்லுநர் கள் உட்பட இறுதி ஆண்டு மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்.  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்வியின் தரம் மற்றும்  உட்கட்டமைப்பு வசதி உட்பட பல்வேறு வரி சைகளில் தரமான உயர்கல்வி வழங்குவதில்  விஐடி தேர்வு செய்யப்பட்டு, கல்வி உலகம்  இதழின் விருதை விஐடிக்கு வழங்கியது. இந்த  விருதை  விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக் கொண்டார். இந்த விருது தேர்வுக் குழுவில் சில்வண்ட்  நிறுவன இயக்குநர் ஆனந்த் சுதர்சன், மும்பை  ஐஐடி முன்னாள் இயக்குநர் அசோக் மிஸ்ரா,  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும முன்னாள் இயக்குநர் நடராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.