tamilnadu

img

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை  குறைக்க வலியுறுத்தி ஆட்டோ சங்கம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஜூன் 17- பெட்ரோல், டீசல், கேஸ் விலை மற்றும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வைத்தீஸ்வரன் கோயில் வரை மாவட்ட எல்லையை காரணம் காட்டாமல் ஆட்டோக்கள் சென்று வர அனுமதி தர வேண்டும், சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் பேருந்துகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆட்டோ சங்கத்தின் வட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். நகர செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் மோகன்தாஸ், சுந்தரமூர்த்தி, முருகன், சிவகுமார், சங்கர் உள்ளிட்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.