சிதம்பரம், மார்ச் 25- சிதம்பரம் தொகுதி கடைகளில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற் பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் கிருமிநாசினி திரவம் (சானிடைசர்) கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்றும், பாது காப்பாக முகக்கவசம் அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பெரும்பா லான மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருப்ப தால் கிருமிநாசினி முகக்கவசத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனை பயன்ப டுத்தி, அதிக விலைக்கு கிருமிநாசனி திரவம் மற்றும் முகக்கவசத்தை கடலூர் மாவட் டத்தில் மருந்து கடைக்காரர்கள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் மால்கள் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் சைலஜா மற்றும் புவனகிரி துணை வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் புவனகிரி பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அதேபோல் சிதம்பரம் பகுதியில் மருந்து கள் ஆய்வாளர் மற்றும் சிதம்பரம் குடிமை பொருள் சிறப்பு வட்டாட்சியர் நந்திதா ஆகி யோர் கிருமிநாசினி திரவம், முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படு கிறதா என சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது முக கவசம் 2 பிளே மாஸ்க் 8 ரூபாய்க்கும், 3 பிளே மாஸ்க் ரூ.10 க்கும். கைகழுவும் திரவம் 100 மில்லி 50 ரூபாய்க்கும், 200 மில்லி 100 ரூபாய்க்கும், 500 மில்லி 250 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அனைத்து வணிகர்களுக்கும் அறிவு றுத்தினர் இதனை மீறி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.