tamilnadu

img

தமிழக தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்: ராஜேந்திரனுக்கு தடை

சென்னை, ஏப்.11-தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.ஆனால், அதில் எந்தவிதமான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் டி.ஜி.பி. ராஜேந்திரனை தேர்தல் பணியிலிருந்து விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ராஜேந்திரன் விடுவிக்கப் பட்டதை தொடர்ந்து, தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள் ளார். இதனையடுத்து, சென்னை மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் அசுதோஷ் சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார். நியாயமாக தேர்தல் நடப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையி டக்கூடாது” என்றும் தேர்தல் தொடர்பான பணிகளை இனி, அசுதோஷ் சுக்லாதான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், இனி அவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேர் தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

;