tamilnadu

மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்....

சென்னை:
தமிழ்நாட்டில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடை மாற்றம் நடைபெற்று வருகிறது.வகையில் மே 25ஆம் தேதி 21 ஐஎப்எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றத்தின் போது காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ் வணிகவரி & பத்திரப்பதிவுத்துறை செயலாளராக இருந்த நிலையில் அவர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.  சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர் ஐஏஎஸ், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக, 21 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டது மிக முக்கிய துறைகளான பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக கே.கோபால் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

அதேபோல்,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராகசுப்ரியா சாகு,  வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளராக  ஜோதி நிர்மலாசாமி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

;