tamilnadu

img

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக அறிவித்து, பதவி - ஊதிய உயர்வு வழங்கிடுக... சமூகநலத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு....

சென்னை:
சத்துணவு ஊழியர்களை அரசுஊழியராக அறிவித்து பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்களுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. 

சங்கத்தின் மாநிலத்தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் ஆகியோர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு வருமாறு:  தமிழகத்தில் 38 ஆண்டு காலமாகசத்துணவு திட்டம் சிறப்பாகவும் உலகம் போற்றும் திட்டமாக பாராட்டுபெற்ற நிலையில், சத்துணவு திட்டத்தில் பணி புரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் தொடர்ந்து தொகுப்பூதியம், மதிப்பூதியம் எனவும் தற்போது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் 38 ஆண்டுகளுக்கு பின்னும் கூட ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்கூட இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதைவருத்தத்துடன் பதிவு செய்கிறோம். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் அரசு ஊழியர்களாக அறிவித்து பணி மூப்புஅடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ஓய்வூதியம் ரூ.2,000 -த்தை வைத்து வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கை நடத்த இயலாது என்பதை தாங்கள் பரிசீலனை செய்துவாழ்க்கை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச ஓய்வூதியம் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.9000 வழங்க வேண்டும்.ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ஒட்டுமொத்த தொகைஎன்ற பெயரால் அமைப்பாளருக்கு ரூ.1 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமாகவும், சமையலர், சமையல் உதவியாளருக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயதினை உயர்த்தியது போல் குறைந்த ஊதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 60 வயதிலிருந்து 62 வயதாகவும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 58 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்த வேண்டும்.

;