tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அண்ணாமலை, ஏ.சி.சண்முகம் தேர்தல் விதிகளை மீறும் பாஜக வேட்பாளர்கள்
கோயம்புத்தூர், ஏப்.7- கோவை தொகுதியில், அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அதிமுகவினரின் வாகனங்களை, பாஜக  வேட்பாளர் அண்ணாமலையின் பரப் புரை வாகனம் முந்திச் சென்றதுடன், இடித்து உரசியது. இதனால், அந்த வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால், தேர்தல் விதிகளை மீறி அடா வடியாக நடந்து கொண்டதற்காக, அதி முக புகார் பேரில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேநேரத்தில் இரவில் 10.30 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்ட வேலூர்  பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் மீதும்  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர்.

நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகல்!
சென்னை, ஏப்.7- சீமானின் நாம் தமிழர் கட்சியிலி ருந்து, அண்மைக் காலமாகவே முக்கிய நிர்வாகிகள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலை யில் தென்சென்னை மாவட்ட நிர்வாகி கள் பலர், சனிக்கிழமையன்று இரவு  அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ள னர். சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் கட்சிக்குள் மிக அதிகமாகி விட்டதாக கூறி, தியாகராயர் நகர் சட்ட மன்ற தொகுதித் தலைவர் மு. ராஜா,  இணைச் செயலாளர் கிஷோர் பிரபா கரன், பொருளாளர் மு. முருகன், செய் தித் தொடர்பாளர் விக்னேஸ்வரன் ஆகி யோர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கார், பைக்,  ரொக்கப் பரிசுகள் அறிவித்த பாஜக வேட்பாளர்
கிருஷ்ணகிரி, ஏப்.7- கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  நரசிம்மன், “ஊத்தங்கரை சட்டப்பேர வைத் தொகுதியில் அதிக வாக்குகள்  பெற்றுத் தரும் மாவட்ட செயலாளர் களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்தெந்த வாக்குச் சாவடி யில் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அதன் முகவர்களுக்கு இருசக்கர வாக னம் வழங்கப்படும். வாக்குச்சாவடி முக வர்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ஒரு லட்  சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகளும்  வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

 

பிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
பிரகாஷ்காரத்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
திருப்பூர், கோவை

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
கடலூர்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்   
பெரம்பலூர், அரியலூர்

உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
தூத்துக்குடி

அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
வடசென்னை