tamilnadu

img

4 மாத ஊதியத்தை தர மறுத்து தரணி சர்க்கரை ஆலை அராஜகம்....

சென்னை:
கடந்த நான்கு மாத காலமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் போளூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஜூன் 4 (வியாழக்கிழமை) வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபடும் அந்த ஆலையின் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் ஆர்ப்பாட் டம் நடத்த  தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கரைபூண்டி கிராமத்தில்  தரணி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை 1996 முதல் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற் சாலை பிஜிபி குழுமத்தின் ஒரு அங்கமாகும். இக்குழுமத்தின் தலைவர் பழநி ஜி.பெரியசாமி ஆவார். இக் குழுமத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தரணி சர்க்கரை ஆலை அலகு 1-ம், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தரணி சர்க் கரை ஆலை அலகு 2-ம்,  கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் தரணி சர்க் கரை ஆலை அலகு 3-ம் உள்ளன.

மேலும் சென்னையில் லீ ராயல் மெரிடியன் ஐந்து நட்சத்திர ஹோட்டலும், கோவையில் லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர ஓட்டலும், நாமக்கல் மற்றும் தென்காசியில் கல்வி நிறுவனங்களும், தரணி   பைனான்ஸ்,  தரணி டிரான்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு நிறுவனங் கள் உள்ளன.இக்குழுமத்தில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் (தற்போதைய தென் காசி மாவட்டம்) சர்க்கரை ஆலை அலகு ஒன்று தொழிற்சாலை துவங் கப்பட்டது. அதன்பிறகு போளூரில் தரணி சர்க்கரை அலை அலகு இரண்டும் அதன்பிறகு மேற்குறிப் பிட்டுள்ள பல்வேறு தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளது.

தரணி குழுமத்தில் தொழிற்சங்கம் அமைப்பதை நிர்வாகம் ஏற்பதில்லை. தொழிற்சங்கம் அமைக்கப்பட்டால் அதை முடக்க தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிற்சங்கத்தை முடக்கும். இவ்வாறாக தரணி சர்க்கரை ஆலை 1 மற்றும் 3-ல் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.(ஊர்மாற்றம், பணியில் தனிமைப்படுத்துதல், மன உளைச்சல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கை மூலம்)  போளூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை அலகு 2-ல் தொழிலாளர் நலச்சட்டங்களை, தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தாமல் தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகள் போல் நடத்தியது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பெற 2005 ஆம்ஆண்டு சி.ஐ.டி.யு தொழிற் சங்கம்அமைத்தனர். ஆலை நிர்வாகம்தொழிற்சங்கத்தை முடக்க  தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஊர் இடமாற்றம் செய்தது. ஊர் மாற் றம்  செய்தும் தொழிற் சங்கம் வலுவாக நடந்ததை பொறுத்துக் கொள்ள இயலாத நிர்வாகம் காவல் காவல் நிலையத்தில் உண்மைக்கு மாறான புகாரை பதிவு செய்தது.மேலும், 11 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர். ஊர் மாற்றம், பணி நீக்கம், குற்றவியல் வழக்கு அனைத்திலும் சங்கம் வெற்றி கொண்டு ஆலை நிர்வாகத்தின் தொடர்ச்சியான தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக களம் கண்டு தொழிற்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கான கரும்பு பணத்தை உரிய காலத்தில் வழங்காத காரணத்தால் கரும்பு பயிரிடுதல் மிகப் பெருமளவு பாதிக்கப்பட்டு கடந்த 2018 - 19 கரும்பு அரவை பருவம் டிசம்பர் - மார்ச் மாதத்துடன் (1.80 லட்சம் டன் கரும்பு அரவை மட்டும்) நிறைவு  பெற்றது. அதன் பிறகு ஆலையில்  பருவகால தொழிலாளர்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் லே-ஆப் செய்யப்பட்டனர்.2020 ஜனவரி 7 முதல் அனைத்து பருவகால தொழிலாளர்களும் லே-ஆப் செய்யப்பட்டனர்.  நிரந்தர தொழிலாளர்கள் 15 பேர், கரும்பு பிரிவு மற்றும் அலுவலக பிரிவு என சுமார் 130 பேர் மட்டும் பணிசெய்து வந்தனர்.(மொத்த தொழிலாளர்கள் 240) இந்நிலையில் 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நிர்வாகம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்கவில்லை. தொழிற்சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக  ஊதியம் வழங்கப்பட்டது.

இறுதியாக 2019 டிசம்பர் மாதத்திற் கான ஊதியம் 2020 மார்ச் மாதம் வழங்கப்பட்டது.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட நிலையில் நிர்வாகம் 2020 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாத ஊதியத்தை வழங்க வில்லை. ஊதியத்தை வழங்க தொழிற் சங்கம் மின்னஞ்சல் மூலமாக பதிவு அஞ்சல் மூலமாக தமிழக அரசு, தொழிலாளர் துறை, மாவட்ட, வட்ட நிர்வாகங்களுக்கு மனுக்கள் அனுப்பியும்  ஊதியம் வழங்கவில்லை.  எனவே ஜூன் 4 அன்று போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் நூதன போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகை ரூ.21 கோடியை மார்ச் 31-க்குள் வழங்குவது எனவும் இந்த ஆண்டு கரும்பு 50000-டன்னுக்கும் குறைவாக இருப்பதால் அரவை பருவம் செயல்படுத்த இயலாது எனவும், கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி தொகையை வழங்கி, கரும்பு பதிவை நடத்தி, அடுத்த ஆண்டு அரவை நடைபெறும் எனவும் நிர்வாகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றுக்கிடையே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முன் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டு இருந்தது.  ஆனால் நிர்வாகம் ஒப் பந்தத்தில் உறுதியளித்தபடி கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை வழங்கவில்லை.இந்நிலையில் தரணி சர்க்கரை ஆலை அலகு 3-ல் இனிவரும் காலங்களில் ஊதியம் வழங்கப்படாது எனவும், ஆலை இயங்கும் வரை ஊதியம் வழங்கப்படாது எனவும், அதுவரை வேலைக்கு வரவேண்டாம் எனவும், நிர்வாகம் வாய்மொழி மூலமாக ஜூன் 1 அன்று தெரிவித்துள்ளது.போளூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை அலகு 2-ல் தகவல் தெரிவிக்கும் 
வரை தொழிலாளர்கள், பொறியாளர்கள், உட்பட யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், கரும்பு விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலை அலகு 1-ல்  21 கோடியும், அலகு இரண்டில் 23 கோடியும், அலகு 3-ல்  27 கோடியும் என மொத்தம் ரூ. 71 கோடி  பணம் வழங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சக்கரை தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஏ.குமார், பொதுச் செயலாளர்  ஏ.உதயகுமார் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், “கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு மாத ஊதியம் வழங்காமல், கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை வழங்காமல் வஞ்சிக்கும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்துள்ளனர்.”தொழிலாளர்க்கு வழங்கவேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிலாளர் களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.இனிவரும் காலங்களில் ஊதியத்தை முறையாக வழங்க வேண் டும், கரும்பு விவசாயிகளுக்கான பாக்கியை வழங்க வேண்டும், ஆலையின் பராமரிப்பு பணிகளை முழுமையாக செய்து ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் தரணி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஜூன் 4ஆம் தேதி குடும் பத்துடன் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்தும் நூதன போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் தொழிலாளர்கள் ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

;