விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட அனந்தபுரம் சங்கீதமங்க லம் நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையின் ஓரத்தில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த பட்டுப்போன மரத்தை அகற்றற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.