tamilnadu

அம்பத்தூர் மூத்த தோழர் அய்யப்பன் காலமானார்

அம்பத்தூர், ஜூன் 29- அம்பத்தூர் லெனின் நகர் 3ஆவது சாலையில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.அய்யப்பன் (75) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜூன் 29) கால மானார். இவர் அம்பத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்சியில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியவர். அவசர நிலை காலத்தில் டன்லப் தொழிலாளியாக பணியாற்றிய போது கட்சி யில் இணைந்தார். அம்பத் தூர் தொழிற்பேட்டை பணி புரியும் தொழிலாளர்களிடம் அவசர நிலையை வாபஸ் பெற வலியுறுத்தி துண்டு பிர சுரம் வினியோகம் செய்தார். பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பொறியி யல் பணியாளர் சங்கத்தின்  பணிகளில் தன்னை இணைத்து கொண்டார். தொடர்சியாக அம்பத்தூர் பகுதியில் இயக்க பணிகளில் தீவிர பங்களிப்பை செலுத் தினார். கோவை விஜயா கொலைக்கெதிரான இயக்  கம், மூன்று நகர் குடி மனைக்கான நீண்ட போராட் டம், பொத்தூர் நிலப் போரட்டம், தொழிற்பேட்டை தொழிலாளர்களின் நீண்ட  போராட்டங்களில் பங்கேற்ற வர். அவர் வசித்த லெனின் நகர் பகுதியில் கட்சி, வாலி பர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் பொதுநலச் சங்கம்  அமைக்க தோழர் சுந்சுரேசனு டன் இணைந்து பணியாற்றி னார். கட்சியின் பகுதிக்குழு உறுப்பினராக நீண்ட காலம்  செயல்பட்டார். அனைவரிட மும் கட்சி வித்தியாசமில்லா மல் பழகக் கூடியவர். அவரது இறுதி ஊர்வ லம் அவரது இல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு டன்லப் சுடு காட்டில் அடக்கம் செய்யப் பட உள்ளது.