tamilnadu

img

மதுபானக் கூடங்களாக மாறிவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை

அம்பத்தூர், பிப்.25- அம்பத்தூர் தொழிற்பேட்டை 1964 ஆம் ஆண்டு 1,430 ஏக்கர் பரப்பள வில் தொடங்கப்பட்டது. இங்கு ஆட்டோ மொபைல், ஆடைகள், பொறியியல் சாதனங்கள் தயாரிக் கப்படுகின்றன. தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட சுமார் பத்து தொழிற்பேட்டைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு 1500க்கும் மேற்பட்ட சிறு குறுந்தொழிற்சாலைகளும், பெரிய தொழிற்சாலைகளும் இருந்தன. தொழிற்பேட்டை துவங்கும் போது தகவல்தொடர்பு வசதிகள், மூலப்பொருட்கள் கிடைக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தொழிலாளர்கள் குடியிருக்க குடியி ருப்பும் கட்டித் தரப்பட்டன. தொழி லாளர்கள் வந்து செல்வதற்கு ஏது வாக அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் 1967ஆம் ஆண்டு பேருந்து முனையமும் அமைக்கப்பட்டன. இங்கு அம்பத்தூர் ஆடை லிமிடெட் (ஏசிஎல்), பம்பாய் பேஷன்ஸ் உள்ளிட்ட பல ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்து வந்தனர். மேலும் பிரிட்டானியா, டி.ஐ. சைக்கிள், டிஐ டைமண்ட் செயின், டன்லப், புளு பேக்டரி, டி.வி.எஸ்., சுந்தரம் கிளைட்டன் போன்ற பெரிய நிறுவனங்கள் தொழிற்பேட்டையை சுற்றி அமைக்கப்பட்டன. மேலும் அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் இங்கிருந்து ஏராளமான உதிரி பாகங்கள் தயார் செய்யும் சிறு குறுந் தொழிற் சாலைகள் இருந்தன. ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மைய மாக அம்பத்தூர் தொழிற்பேட்டை விளங்கியது.

ஆனால் மத்திய மாநில அரசு களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் சிவானந்தா, குளோத்திக் பேக்டரி, இந்தியா மீட்டர் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்  களும், சிறு குறு நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் கால்செண்ட ர்களும், ஐடி நிறுவனங்களும் வரத்தொடங்கின. மத்திய பாஜக அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.வரியால் பல சிறு குறுந் தொழிற் சாலைகள் மூடப்பட்டு மதுபானக் கூடங்களாக மாறத் தொடங்கின. தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மையப்படுத்தி அதில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 20க்கும் மேற்பட்ட மது பானக் கடைகள் உள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டையின் மையப்பகுதி யில் மதுபான குடோன் உள்ளது குறிப்பிடத்தக்கது. முகப்பேர் சாலையில் சத்தியா நகர் பகுதியில் மட்டும் 200 மீட்டருக்குள் 4 மதுபானக் கடைகள் உள்ளது. குறிப்பிடத்தக் கது. எந்த நோக்கத்திற்காக தொழிற் பேட்டை உருவாக்கப்பட்டதோ இப்போது அது தொழிற்பேட்டையாக இல்லாமல் மதுபானக் கூடங்களாக மாறி வருவது தொழில் நசிவையும், வேலையின்மையையும் எடுத்துக் காட்டுகின்றன. சிறு குறுந் தொழிற்சாலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வேலையி ன்மைக்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற னர்.