சென்னை, நவ. 14- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நா டகா அணை கட்ட தடையில்லை என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலை யில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் வழியாக பயணித்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய நீராதாரமாகவும், கிளை ஆறாகவும் விளங்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடகம் அணை கட்டுகிறது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியாகவே இருந்தாலும், அதில், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி, எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசு முறையிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளு படி செய்ததோடு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டத் தடை யில்லை என உத்தரவிட்டிருக்கிறது.