tamilnadu

img

அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்குக! தமிழக முதல்வருக்கு சிஐடியு வலியுறுத்தல்

சென்னை,ஏப்.3- அனைத்து முறைசாரா தொழிலாளர்க ளுக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலக்குழு சார்பில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முறை சாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதில் கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடைபாதை வியாபாரம் ஆகிய தொழில்வாரி நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும்.

தற்போது கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடைபாதை வியாபாரம் நல வாரியங் களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் புதுப்பிக்காததை காரணம் காட்டி இந்த நிவாரண உதவிகள் மறுக்கப்படு வதாக புகார்கள் வந்துள்ளன.  புதுப்பித்தல் என்பது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை என்கிற நிலை வந்தபிறகு 2015-க்கு முன்பு பதிவு செய்தவர்கள் புதுப் பிக்க முடியும். எனவே பதிவு செய்யப்பட் டுள்ள கட்டுமானம், ஆட்டோ மற்றும் நடை பாதை வியாபாரம் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் இந்த நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் தையல், சமையல், சலவை, முடித்திருத்துவோர், வீட்டுப் பணியா ளர், கைத்தறி, விசைத்தறி, சுமைப்பணி உள்ளிட்ட 64 தொழில்களுக்கு உடலுழைப்பு மற்றும் 13 நல வாரியங்கள் அரசால் நடத்தப் படுகிறது.

இந்த வாரியங்கள் உட்பட மொத்த முள்ள 17 நல வாரியங்களில் சுமார் 60 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வரு மானம் இன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாமல் தவிக்கின்றனர்.  எனவே இவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரண உதவி அளிப்பதற்கான நடவடிக்கையினை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;