மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிடக் கோரியும், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் செவ்வாயன்று (ஆக.18) சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணை தலைவர் கே.இளங்கோ, மாநில பொருளாளர் எஸ்.சிவக்குமார், மாவட்ட தலைவர் கே. சுப்புராம், மாவட்ட செயலாளர் பா.சீனிவாசன் உள்ளிட்டு ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.