சென்னை,நவ.20- மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரம சிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டி ருந்தது.
2000-ல் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் 2015-ல் காலமானார். இந்த நிலையில் சிறப்பு நீதி மன்றம் விதித்த தண்ட னையை எதிர்த்த மேல்முறை யீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை யை சென்னை உயர்நீதிமன் றம் இன்று உறுதி செய்துள் ளது. அத்துடன் மேல்முறை யீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.