tamilnadu

அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிடவில்லை: மு.அப்பாவு.....

சென்னை:
அதிமுக உறுப்பினர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடவில்லை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதால் காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில் பேரவையில் புதனன்று(ஆக.18) கொடநாடு விவகாரம் குறித்து கூச்சலிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் தலையீடு இல்லை. அதனால் யாரும் பயப் படத்தேவையில்லை. அதிமுகவினர் எங்க அப்பன் குதருக்குள் இல்லை என்பது போல செயல்படுகின்றனர். நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

இந்நிலையில், வியாழனன்று(ஆக.19) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது பேரவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில்,“ புதன்கிழமை அவையில் நடந்த சம்பவம் குறித்து சில பத்திரிகைகள், எப்படி செய்தி வந்திருக்கிறது என்றால்? கொட நாடு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம். அதிமுக எம்எல்ஏக் கள் வெளியேற்றம் என்று வந்துள்ளது. உள்ளடக்க செய்திகளில் முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர் என்று வந்துள்ளது. அவர்களாகவே(அதிமுக) வெளியேறிய ஒரு செய்தியை வெளியேற்றியதுபோல் செய்திகள் வெளியிட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய செய்திகளை வெளியிடும்போது பத்திரிகைகள் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர் மு. அப்பாவு, “புதன் கிழமை பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் தாங்களாகவே வெளியேறினர். நான் வெளியேற்றவில்லை. மக்களுக்கான பிரச்சனைகளை பேச வேண்டிய அவையில், தனிப்பட்ட பிரச்சனையை எழுப்பக் கூடாது, இருப்பினும் நான் அதிமுகவினரை அனுமதித்தேன். ஆனால், என் அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர் கள் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர். பின்னர் அவர்களாகவே பேரவையில் இருந்து வெளியேறினர். நான் வெளியேற்றவில்லை” என்றார்.

;