tamilnadu

img

பேரவைத் தலைவராக பதவியேற்றார் மு.அப்பாவு....

சென்னை:
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் தலைவராக அப்பாவு, துணைத் தலைவராக கு. பிச்சாண்டி இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்று பேரவையில் பதவியேற்பும் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளாத உறுப்பினர்கள் அவைக்கு வந்து இருந்தால் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தற்காலிக தலைவர் கு பிச்சாண்டி. கூறினார். ஆனால் ஒருவரும் வரவில்லை.இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான விபரத்தை வெளியிட்டார். தலைவர் பதவிக்கு மு.அப்பாவு மனுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிய, அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்து இருக்கிறார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். அத்துடன் அவரது பணி நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து, சபைமரபு படி அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேரவைத் தலைவர் மு. அப்பாவை அழைத்துச் சென்று அவரது இருக் கையில் அமர வைத்தனர். அப்போது முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளில் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.அதன் பிறகு, துணைத் தலைவர் தேர்தலுக்கான விபரத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.துணைத் தலைவருக்கு கு. பிச்சாண்டியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர்அப்பாவு அறிவித்தார்.

;