tamilnadu

img

8 ஆயிரம் பேரிடம் அதிமுக மின்னல் வேக நேர்காணல்.... உளவுத்துறை தகவல் அடிப்படையிலேயே சீட்...

சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகதலைமை அலுவலகத்தில், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. முதலில் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம், ஒருங்கிணைந்த நேர்காணல் நடைபெற்றது. அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால், ஒருங்கிணைந்த நேர்காணல் நடத்தும் சூழ்நிலை உருவாகி விட்டதாகக் கூறி காசு கட்டி விண்ணப்பம் வாங்கியவர்களை சமாளித்ததோடு, அதிமுகவை எதிர்க்கும் சக்திஎந்த கட்சிக்கும் இல்லை என்றும் கூறிக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விருப்பமனு அளித்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடும் தகுதி இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கிடையில் நேர்காணல் குறித்து எழுதியுள்ள தமிழ் இணையதளம் ஒன்று, “8,200 பேர் ஒரே நாளில் நேர்காணல் நடத்துவது எப்படிசாத்தியம் என்பது தெரியவில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒரு நபரைப் பார்த்தாலும் ஒரு மணி நேரத்திற்கு 60 பேரை மட்டுமே பார்க்க முடியும். இரவு ஒன்பது மணி வரை 12 மணி நேரம் பார்த்தாலும் 720 பேரை மட்டுமே பார்க்க முடியும். இடையில் உணவு இடைவேளை எனஉண்டு. 8,200 பேரை பார்ப்பதுஎன்பது எப்படி சாத்தியம்எனத் தெரியவில்லை. அதிமுக போட்டியிடும் தொகுதி மற்றும் உளவுத்துறை அடிப்படையில் செல்வாக்கு உள்ள நபர்களுக்கு ‘சீட் தரப்படலாம்’ எனத் தெரிவித்துள்ளது.

;