tamilnadu

அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக வின் செயற்குழு கூடுகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செப்டம் பர் 28 காலை 10 மணிக்கு தொடங்கும் செயற்குழுவில், தலைமை செயற்குழு உறுப் பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 250 பேர் பங்கேற்க உள்ளனர்.இதில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செயற் குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, அவைத் தலைவர் இ.மதுசூதனனை அவரது இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். ஓய்வில் இருக்கும் அவரை ஓபிஎஸ் சந்தித்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.