tamilnadu

img

கலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 
தமிழக அரசு சார்பில் பல துறைகளில் சிறந்து விளக்குவோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.  அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சர் மாபாபாண்டியராஜன் கலைமாமணி விருதை வழங்கியுள்ளார்.