சென்னை,ஜூலை 24- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் படங் களை அகற்றும் முடிவை கைவிட்டு தனது அறிக்கையை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மாநிலச் பொதுச் செயலாளர் எஸ். சிவக்குமார் ஆகியோர் விடுத்திருக் கும் அறிக்கை வருமாறு:- சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இம் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தில் உள்ள கீழமை நீதிமன்றங்க ளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி யுள்ளார். இதில், நீதிமன்ற வளாகங்களில் காந்தியடிகள், திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் படங்கள், சிலைகள் நீதிமன்ற வளாகத்திற்குள் வைக்க அனுமதிக்க கூடாது என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல நீதிமன்ற வளாகங்க ளில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் மற்றும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆகியோ ரின் படங்கள் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்றும்படியாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவுக்குழு தலைவராக இருந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கரின் பங்களிப்பு மகத்தானது. சுதந்திர இந்தியாவில் ஜனநாய கம், குடியரசு, சுயாதிபத் தியம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி சமூக நீதி போன்ற நவீன கோட்பாடு கள் கொடுத்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு தந்தையாக கருத கூடியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழியே தான் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் செயல்படுகிறது, அண்ணல் டாக்டர் அம்பேத்கர் உருவப்படம், சிலை யும் நீதிமன்ற வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ளது என்பது இந்திய மக்கள் அனைவரும் அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் ஏற்கெனவே உள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் படங்களை அகற்றும் முடிவை கைவிட்டு உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள சுற்றறிக்கை திரும்பப் பெற வேண்டும்.
மேலும் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் படங்கள் நீதிமன்ற வளாகங்களில் அமைக்கப்படுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இப்பிரச்சனையில் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் கைவிட வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன் சிலில் இந்த பிரச்சனையில் தலை யிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் பதிவா ளரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள். அரசியலமைப்பின் தந்தை படத்தை அகற்றுவதா? தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலா ளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில்,“ சென்னை உயர்நீதிமன்ற பதிவா ளர் சுற்றறிக்கை அதிர்ச்சியளிக்கி றது. அண்ணல்அம்பேத்கர் உருவ படங்கள் உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் நிறுவப்பட கூடாது, இத்தகைய வழிகாட்டலை மீறுவது நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் கடந்து சாதீய பாரபட்சங் கள் தலைவிரித்தாடுகிறது என்ப தற்கு நீதிமன்றங்களில் குவியும் வன்கொடுமை வழக்குகள் சான்றாக உள்ளது. எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது முடிவை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியலமைப்பின் தந்தை படத்தை அகற்றுவதா?
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலா ளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில்,“ சென்னை உயர்நீதிமன்ற பதிவா ளர் சுற்றறிக்கை அதிர்ச்சியளிக்கி றது. அண்ணல்அம்பேத்கர் உருவ படங்கள் உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் நிறுவப்பட கூடாது, இத்தகைய வழிகாட்டலை மீறுவது நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் கடந்து சாதீய பாரபட்சங் கள் தலைவிரித்தாடுகிறது என்ப தற்கு நீதிமன்றங்களில் குவியும் வன்கொடுமை வழக்குகள் சான்றாக உள்ளது. எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது முடிவை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.