சென்னை, ஆக. 30 - மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் வியாழனன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதை யடுத்து, 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை யொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அது ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்தி லும் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.