tamilnadu

img

ஒரு மாவட்ட ஊராட்சி; 27 ஒன்றியத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, ஜன.12- மாவட்ட ஊராட்சித் தலைவரைத்  தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றி யங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான மறைமுகத் தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள் ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. மாவட்ட ஊராட்சித்தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 12 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் போதிய எண்ணிக்கையில் உறுப்பின ர்கள் வருகையின்மையால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை காரணமாக 12 இடங்களிலும், போதிய எண்ணிக்கை யில் உறுப்பினர்கள் வருகையின்மை காரணமாக 13 இடங்களிலும், தேர்தல்  நடத்தும் அலுவலரின் உடல்நலக் குறைவு காரணமாக 2 இடங்களிலுமாக மொத்தம் 27 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;